உலகம்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில்,அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

குறித்த இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் 3-ம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பித்தது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் குறித்த நிறுவனம் தடுப்பூசி பிரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

60 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பான வகையில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி