உலகம்

துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்து -11 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்பகுதியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், தங்களது நாடுகளை விட்டு ஐரோப்பியா உள்ளிட்ட வேறு நாடுகளை நோக்கி அகதிகளாக புலம்பெயர்வது நடந்து வருகிறது.

அவர்கள் ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்கள் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் பலர் அதனை கவனத்தில் கொள்ளாமல் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் புறப்பட்டு கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி 2 பேர் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ட்ரம்ப் கணக்கினை ஆட்டங்காட்டிய ட்விட்டர்

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox