கேளிக்கை

தோல்வியில் இருந்து மீள முடியாமல் அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு

(UTV | இந்தியா) – அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

நடிகை அனுஷ்கா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அனுஷ்கா.

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக புராண கதையில் நடிக்க அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம்.

சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமான குணசேகர் இயக்குகிறார்.

ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது.

Related posts

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…

நயன்தாரா திரைப்படத்தில் ஹொங்கொங் கலைஞர்

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார்?