உலகம்

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிக்கான மருந்து விநியோகம்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசிக்கான மருந்து விநியோகம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் பணிகள் பாதுகாப்பாக இடம்பெற்று வருவதாக அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த வருடம் தடுப்பூசி மருந்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இயன்றவரை தடுப்பூசி மருந்தை விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே தடுப்பூசி மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்படலாமென அமெரிக்க சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மேலும் 28 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் : லுப்தான்சா ஏர்லைன்ஸ்

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை