(UTV | கொழும்பு) – மினுவாங்கொட பிராண்டிக்ஸ் (Brandix) தொழிற்சாலையினைத் தொடர்ந்து மற்றும் இரு பிரதான உள்நாட்டு ஆடைத் தொழிற்சாலைகளான ‘ஹெலா க்லோதிங்’ (Hela Clothing) மற்றும் ‘சவுத் ஏஷியா’ (South Asia Textiles Limited) எனும் நிறுவனங்களில் தலா ஒரு ஊழியர் வீதம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
‘ஹெலா க்லோதிங்’ நிறுவனத்தின் திஹாரிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த ஊழியர் இறுதியாக ஒக்டோபர் மாதம் 02ம் திகதி இறுதியாக பணிக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறே, அவர் பழகிய அனைவரும் தற்சமயம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ‘சவுத் ஏஷியா’ நிறுவனத்தில் பணியாற்றும் பூகொட பிரதேசத்தில் உள்ள ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த தொழிற்சாலையும் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. எனினும் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏனையோரது PCR பரிசோதனைகள் முடிவுகளில் மாற்றங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.