(UTV | அவுஸ்திரேலியா) – பணத் தாள்கள், தொலைபேசிகள் போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது.
தொலைபேசி திரைகள் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் எனவும் மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது.
இந்த ஆய்வு முடிவுகள், நோய் பரவலைத் தடுக்கவும், ஆபத்தை குறைக்கும் நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.