உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 105 கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 105 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று(10) கொவிட் 19 தொற்றுறுதியானது.

இந்நிலையில், மினுவாங்கொட கொத்தணியில் பதிவான கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,628 ஆகும்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,309 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா துறையை மேம்படுத்த – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை.

இலங்கை பணியாளர்கள் வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்