(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள சதொச, கூட்டுறவு நிலையம், அரச மருந்தகம், சிறப்பு அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றை இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறக்கமுடியும என பொலிசார் அறிவித்துள்ளது.