உள்நாடு

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான நாளை(10) நாளை மறுதினம்(11) கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்ட 18 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், நாட்டில் கொரோனா நோய்த் தொற்று எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது உறுதியாகக் கூற முடியாது மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்திய மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு