உள்நாடு

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது.

திவுலபிடிய மற்றும் மினுவங்கொடை கொவிட் 19 கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 19 கொவிட் தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கும், குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் மற்றும் ஈரானில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 1197 பேர் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி

பாண் விலையில் இன்று மாற்றம்

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]