விளையாட்டு

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

(UTV | ஸ்பெயின் ) -ஸ்பெயினில் நடைபெற்ற தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகண்டா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (Joshua Cheptegei) (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.00 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்துள்ளார்.

Related posts

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்