கிசு கிசு

பொதுமக்களுக்கு தீர்மானமிக்க 7 நாட்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 07 நாட்களுக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் எதிர்வரும் 07 நாட்கள் பெரும் சவாலான நாட்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான நிலையை கட்டுப்படுத்துவது எவ்வாறு அதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்கள் என்பன குறித்து உரிய தரப்பினருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மினுவங்கொட கொத்தனியில் இருந்து இதுவரை 1034 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் இருந்து ஓரிரு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் குறித்த மாவட்டங்களுக்கு எதிர்வரும் 7 நாட்கள் அவதானமிக்க நாட்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராஜினாமா பட்டியலில் ‘தயாசிறி’

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழும் பெண்மணி