விளையாட்டு

ராஜஸ்தான் தலைவருக்கு 12 இலட்சம் அபராதம்

(UTV | துபாய்) – ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20 ஆவது போட்டியில் நேற்றைய தினம் (06) மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் தான் இருந்தது. சூரிய குமாரின் மிக அபாரமான 79 ஓட்டங்கள் மும்பையின் வெற்றிக்கு வித்திட்டது. அதுமட்டுமன்றி மும்பை பந்துவீச்சாளர் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தது எனலாம்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தலைவர் ஸ்மித் மெதுவாக பந்து வீசியதால் அவருக்கு ரூபாய் 12 இலட்சம் அபராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நேற்றைய தோல்விக்குப் பின் ராஜஸ்தான் தலைவர் ஸ்மித் பேட்டி அளித்தபோது ’கடந்த மூன்று போட்டிகளில் தாங்கள் சரியாக விளையாடவில்லை என்றும் விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் இழந்து கொண்டிருப்பது பலவீனம் என்றும் கூறினார். ஆனால் இதற்காக நாங்கள் பயப்பட போவதில்லை என்றும் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஃபேல் நடால் 89 ஆவது பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி