உள்நாடு

சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகளை தவிர்ப்பதானது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் என்பதால் அவ்வாறு செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், நோயாளர்களை அழைத்து செல்ல அம்பியூலன்ஸ்களை வீடுகளுக்கு அனுப்பிய போதிலும், சிலர் வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு, வீடுகள் வரை முன்னெடுக்கப்படவுள்ள அம்பியூலன்ஸ் சேவைகள் மூலம் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அமைச்சர், மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை

ரிஷாட் எம்.பி யின் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

காலி அணியின் உரிமையாளருக்கு பிணை

editor