(UTV | கொழும்பு) -மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
————————————————————————-[UPDATE 19.50 PM]
மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி
(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3483 ஆக அதிகரித்துள்ளது
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.