உள்நாடு

அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனையாக இருக்கும்

(UTV | அமெரிக்கா) – உடல் நலம் மேம்பட்டிருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்ப நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட நான்கு நிமிட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் மிகவும் அயர்வாக காணப்படும் டிரம்ப், “அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனையாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

நேற்று காலை அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், டிரம்ப் நலத்துடன் இருப்பதாகவும் தேறி வருவதாகவும் குறிப்பிட்ட நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் வெளியான வெள்ளை மாளிகை அறிக்கையில், “கடந்த 24 மணி நேரமாக திரு டிரம்பின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தது; அடுத்த 48 மணி நேரம் அவரது பராமரிப்பில் மிக முக்கியமான காலகட்டம்,” என்று குறிப்பிட்டது.

இரு வேறு வித்தியாசமான அறிக்கைகள் வெளியானதையடுத்து, டிரம்ப் தனது டுவிட்டரில் காணொளியை வெளியிட்டார்.

இதற்கிடையே, டிரம்புக்கு செயற்கை நோயெதிர்ப்புத் தன்மையை உருவாக்கக்கூடிய ‘பரிசோதனை’ சிகிச்சை முறை பயன்படுத்தப்படுவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மெலனியா டிரம்ப் நலமாக இருப்பதாகவும் சிறிய அளவில் இருமல், தலைவலி அவருக்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!

மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் மின்வெட்டுங்கள்

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்