உள்நாடு

20ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு [UPDATE]

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

———————————————————————————————–[UPDATE 08.54 AM]

20ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(02) நான்காவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

பிரதமர், பதவியை இராஜினாமா செய்ய தயாராம்