உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

Related posts

கிண்ணியா படகு விபத்து : 07 ஆவது மரணம் பதிவு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் கரை ஒதுங்கிய படகு

editor

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor