உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,254 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,388 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 121 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை