உலகம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியது

(UTV | இந்தியா ) – இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,473,544 ஆக திகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

சீனாவில் புதிதாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

ஆந்திரா விடுதியில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் உட்பட 11 பேர் பலி

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை