உள்நாடு

டெங்கு நோய் பரவும் அபாயம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் நாட்டில் 27, 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில மாத்திரம் 11,608 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

“எரிபொருள் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் காரணமல்ல”