உள்நாடு

பேருந்து விபத்தில் 24 மாணவர்கள் வைத்தியசாலையில் [PHOTOS]

(UTV | ஹட்டன் ) – டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பயணிகள் பஸ், பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 24 மாணவர்கள் உட்பட 30திற்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியீட்டுள்ளனர்

பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதுග

No description available.

No description available.

No description available.

No description available.

 

Related posts

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor