உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இம்முறை தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகளில் பரீட்சை இலக்கம் மற்றும் விண்ணப்பதாரிக்கான பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
2936 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்கு3,31,694 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது