உள்நாடு

பதிவுசெய்த தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல் 

(UTV | கொழும்பு) – TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் இன்று(01) முதல் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

பதிவு செய்யப்பட்டாத கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் செயற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை எனவும் இன்று முதல் கொள்வனவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிறுவனங்களில் மாத்திரம் இன்று முதல் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

புதிதாகக் கொள்வனவு செய்யும் தொலைபேசி சாதனத்தின் EMI இலக்கத்தை 1909 எனும் இலக்கத்துக்கு SMS அனுப்புவதன் மூலம், வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளமுடியும்

இதேவேளை, வௌிநாடுகளில் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்யும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு Online ஊடாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்

நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு