உள்நாடு

மேல் மாகாணத்தில் 417 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்று அதிகாலை 5 மணிமுதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஞ்சா போதைப்பொருள் மோசடி தொடர்பில் 103 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை