உலகம்

28 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா ஊழியர்கள் 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக வால்ட் டிஸ்னி பூங்கா மூடப்பட்டுள்ளது.

இதனால், பல கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டமையினால் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில், புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கபட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், எஞ்சிய பூங்காக்கள் இன்னும் திறக்கப்படாததால் அந்நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் தனது பூங்காக்களில் வேலை செய்துவரும் ஊழியர்களில் 28 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘ஈரான் பயணம் உலக அரங்கில் புதின் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது’

ஆந்திரா விடுதியில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் உட்பட 11 பேர் பலி

இஸ்ரேல் இராணுவத்தினால் காசாவில் 130 சுரங்கங்கள் அழிப்பு!