விளையாட்டு

சறுக்கியது சென்னை சுப்பர் கிங்க்ஸ்

(UTV | கொழும்பு) – 13 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முதலாக புள்ளிகள் பட்டியலில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளமையானது அவ்வணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது எனலாம்.

கடந்த 12 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வரை ஏழாவது இடத்தில் இருந்த சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி, நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதை அடுத்து 8வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.

எட்டாவது இடத்தில் இருந்து ஹைதராபாத் அணி தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று தோல்வி அடைந்ததால் டெல்லி அணி முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தற்போது முதலிடத்தில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் 3 முதல் 5 ஆவது இடத்தில் உள்ளன என்பதும், கொல்கத்தா ஏழாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 12-வது முறையாக தொடர் வெற்றி

இந்தியா , நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று