உலகம்

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தலை மீறினால் அபராதம்

(UTV | கொழும்பு) – இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதமாக விதிக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நேற்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுவரை 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன், 4.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதம் விதிக்கபப்டும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று – உலக சுகாதார அமைப்பு

ஸ்லோவாக்கியாப் பிரதமர் மீதான துப்பாக்கிசூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில்

உய்குர் முஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீன அரசு