உள்நாடு

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் 13 அதிகாரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் பல பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் தற்போது சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது