கேளிக்கை

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்

(UTV | இந்தியா) – மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் இராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள் துளைக்கப்பட்டு சற்றுமுன்னர் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் 74 ஆவது வயதில் நேற்று காலமானார்.

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ,ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் பிரமுகர்கள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் இந்திய திரையுலக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

2018 ல் ஜெய் அஞ்சலிக்கு திருமணமா?

பிரபல நடிகையை நடுரோட்டில் வைத்து கதற விட்ட ரவுடிகள்

UTV திரையில் இன்று ‘கஜினி’