உலகம்

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

(UTV | வட கொரிய) – தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தென் கொரிய தரப்பு தெரிவித்துள்ளது.

இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

வட கொரிய படைகளால் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்படுவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோசமடைந்து வரும் இருநாடுகளுக்கிடையேயான உறவை இந்த சம்பவம் மேலும் பலவீனப்படுத்தியது.

இந்தநிலையில் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Related posts

twitter நிறுவனத்தின் புதிய CEO

இந்தியா சிவப்பு பட்டியலில்

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!