(UTV | துபாய்) -44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை களத்தடுப்பை தேர்வு செய்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.