உலகம்

திமிங்கலங்களை கருணை கொலை செய்யும் அரசு

(UTV | அவுஸ்திரேலியா) – கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் தொடர்பில் நேற்றைய தினம் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம், இந்நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய அவுஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது. 

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் பலர் அவற்றை படகுகள் மூலம் மீண்டும் கடலுக்குள் கொண்டு விடுவது, தண்ணீரை மேலே ஊற்றி ஈரப்பதத்துடன் வைத்திருப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

At Least 380 Whales Reported Dead in Mass Stranding Near Australia | PEOPLE.com

சுமார் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவை கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த 500 கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன.

70 திமிங்கலங்களை மட்டுமே மீட்டி கடலில் விட முடிந்தது. எனவே மீதமுள்ள திமிங்கலங்கள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், உயிரிழந்த 380 திமிங்கலங்களை கடற்கரையிலேயே புதைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.