கிசு கிசு

கொக்கெயின் பாவனை – சர்ச்சையில் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்

(UTV | இந்தியா) –  ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் என பிரபல பாலிவுட் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது போதைப்பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகைகள், நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவால் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிமோன் கம்பாட்டா உட்பட பலரிடம் விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் எனவும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்க தயாராக இருக்கிறேன் எனவும் ஷெர்லின் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில் ‘‘நான் ஒருமுறை கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியை காண சென்றிருந்தேன். வீரர்களுக்கான விருந்துபசாரத்திற்கு பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன்.

இதன்போது பெரும்பாலான நட்டசத்திரங்களின் மனைவிகள் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என கூறியுள்ளார்.

Related posts

ரணில் – சஜித் இடையே தீர்மானமிக்க சந்திப்பு

‘பிரதமர் பதவி விலக வேண்டாம்’ – மொட்டு கோரிக்கை

பவி உள்ளே வாசு வெளியே