கேளிக்கை

SPB உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

(UTV | இந்தியா) – திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்பிபி சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் கூறியவதாவது,

எஸ்பிபி நலமாக இருக்கிறார் எனக் கூறமுடியாது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார்.

Related posts

நைஜீரிய சிறுவர்களை ஈர்த்த ‘ஜகமே தந்திரம்’

காஜல் அகர்வாலுக்கு திருமணம்

கொரோனா யுத்தத்தை வேட்டையாடும் மாஸ்டர் விஜய் [VIDEO]