கேளிக்கை

‘சக்ரா’வுக்கு தடை

(UTV |  இந்தியா) – விஷால் நடிப்பில் உருவான சக்ரா (Chakra) திரைப்படம் ஓடிடிக்கு விற்கப்படுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் தங்களுக்கு சொல்லப்பட்ட கதையை சக்ரா படமாக எடுத்துள்ளதாக ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சக்ரா பட விற்பனைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம் செப்டம்பர் 30க்குள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த புதிய சிக்கலால் விஷாலில் சக்ரா படம் வெளியாதில் காலதாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்…

குஷ்பு பயணித்த கார் விபத்தில் சிக்கியது