கேளிக்கை

சுஷாந்த் சிங் மரணம் – தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு அழைப்பாணை

(UTV | இந்தியா) – நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் குழுவினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.

இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

Related posts

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் தமன்னா

குடும்பத்துடன் பிகினியில் போஸ் கொடுத்த நடிகை கரீனா

சூர்யா முன் சாய் பல்லவி கதறி அழுதது இதற்கு தானா?