கிசு கிசு

மாத்தறை மக்கள் மத்தியில் கொரோனா – புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTV |  மாத்தறை) – கொரோனா வைரஸ் இனால் புதிதாக தொற்றுக்குள்ளான ரஷ்ய விமான ஊழியர் தொடர்பிலான சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரதேசத்தில் மீளவும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, குறித்த ரஷ்யா இனத்தவர் இருந்த மாத்தறை பிரதேச சுற்றுலா ஹோட்டலில் உள்ள பணியாட்கள், அவர்களது குடும்பத்தினர், குடும்ப உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட 100 பேருக்கும் அதிகமானோர் பீசிஆர் (PCR) பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மாத்தறை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மக்கள் மத்தியில் உரிய சுகாதார முறைகளை கடைபிடிக்காது மக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இது கொரோனா இலகுவாக சமூகத்தில் பரவுவதற்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் தொடர்ந்தும் அரசுக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி வருகின்ற நிலையில் எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

இன்று முதல் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு