விளையாட்டு

உலக சாதனை படைத்த IPL முதல் போட்டி

(UTV | துபாய்) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்படப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது.

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை தொலைகாட்சி மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்

ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த போட்டியை தொலைகாட்சி மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி சபையின் ஆய்வுபடி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்த்ததில்லை என்றும், அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

பங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்