விளையாட்டு

சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

(UTV | ஐக்கிய அரபு அமீரகம்) -சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சென்னை அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி 29 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 போட்டியில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related posts

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்

அரையிறுதியில் சாய்னா தோல்வி