உலகம்

2024ம் ஆண்டு 2 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு

(UTV | அமெரிக்கா) – 2024-ம் ஆண்டு நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறப்படுகின்றன.

நிலவில் முதன்முதலில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையை பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ விண்கலம் மூலம் சென்று நிலவில் காலடி வைத்து 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி நாசா கொண்டாடியது.

இந்த நிலையில் நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. 2 விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ள நாசா அவர்களில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

டிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி