உலகம்

நினைவுச் சின்னம் எதற்கு என்றும் நினைவா சின்னமாக ‘கொரோனா’

(UTV | பிரேசில்) – பிரேசிலில் கொவிட் 19 (கொரோனா) வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,472,205 ஆகவும் உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 968,913 ஆகவும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 23,097,224 ஆகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது 7,406,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,560,083 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,851,227 ஆகவும், பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 137,350 ஆகவும் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 128 அடி நீளமுள்ள ரிப்பன் வடிவிலான இந்த நினைவுச் சின்னத்தில் கொரோனாவால் உயிரிழந்த 4,000 பேரின் பெயர்கள் பொறிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

twitter நிறுவனத்தின் புதிய CEO