வணிகம்

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று 1,500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, கடந்த ஆம் திகதி அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது.

எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் இன்று 22 கரட் தங்கத்தின் விலை 91,700 ரூபாவாக குறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 93,050 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சம் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச ரீதியில் தேயிலையை மேலும் மேம்படுத்த விஷேட கண்காட்சி

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்