உள்நாடு

கண்டி மாடி கட்டட சரிவு – ஆராய்வுக்கு இன்று குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – கண்டி – புவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருந்த 10 பேர் அடங்கிய குழுவானது இன்று(22) காலை கூடுகின்றது.

மத்திய மாகாண பொறியியல் சேவைகள் துறையின் பிரதி மாகாண பணிப்பாளர் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த குழு கூடவுள்ளது.

மத்திய மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி ஆணையம், கண்டி மாநகர சபை, புவியியல் மற்றும் சுரங்க பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பத்து உறுப்பினர்கள் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கண்டி நகர எல்லையில் உள்ள ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கும், அவற்றின் நிலை மற்றும் ஆபத்தான கட்டிடங்கள் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – பிரசன்ன ரணதுங்க.

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி