கிசு கிசு

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

(UTV | இங்கிலாந்து) – கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் பல பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இங்கிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கொரோனா வைரஸ் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானர்வர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஜமைக்கா ‘மின்னல்’ உலகிற்கு [PHOTOS]

ரணிலின் அழைப்பினை மறுக்கும் சஜித்

மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்…