உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3299 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது 186 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Related posts

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு 

சஜித் – அநுரவின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்