கிசு கிசு

குரங்கு அமைச்சை கோரும் டிலான்

(UTV |  பதுளை) – குரங்குகளால் விவசாயிகள் அன்றாடம் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல, இது தொடர்பில் இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கூட கதைத்திருந்தார். இது இவ்வாறு இருக்க இது தொடர்பில் டிலான் பெரேராவும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்.

அதாவது, பத்திக் அமைச்சு, மட்பாண்ட அமைச்சு ஆகியவற்றினால் அதிகமான வேலைகள் செய்ய முடியும். அதே போன்று, குரங்குகளால் விவசாயம் மற்றும் பயிர் வளர்ப்புக்கு இருக்கின்ற பாதிப்புக்களை தவிர்க்க வேண்டுமாயின், தன்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமித்தால் குரங்குகளின் தொல்லைகளை தீர்ப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்காக என்னை குரங்கு அமைச்சர் என்று அழைத்தாலும் நான் வருத்தப்பட போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பதுளையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மந்திகள், குரங்குகள் உட்பட அந்த இனத்தால் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் நாள்தோறும் எதிர்நோக்கி வருகிறார்கள். எமது விவசாய உற்பத்திகளில் 60 வீதத்தை இந்த குரங்குகளும் மந்திகளும் அழிக்கின்றன.

தற்போது இந்த குரங்குகளும், மந்திகளும் கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கும் வந்து விட்டது. இப்படியே போனால் பாராளுமன்றுக்கும் வந்துவிடும் . இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக நான் “மந்தி” விவகார அமைச்சராக பதவியேற்கவும் தயார் எனக் கூறியுள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியினர் தலதா மாளிகைக்கு

காதலர்களுக்கு காவலாக பொலிஸார்?

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?