உலகம்

எயார் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை

(UTV | ஹாங்காங்) – கொவிட்19 தொற்று அச்சுறுத்தலினால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எயார் இந்திய விமானங்கள் ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் 19 ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துகள் வழமைக்கு வந்திருந்தன.

இந்நிலையில் ஹாங்கங் நாட்டிற்கு வந்த 21 வெளிநாட்டு பயணிகளுக்கு கொவிட் 19 (கொரோனா) இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு பயணிகள் எயார் இந்தியா விமான சேவை மூலம் ஹாங்காங் வந்துள்ளனர்

இதனால் எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி வரை ஹாங்காங் வர எயார் இந்தியா விமானங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எயார் இந்தியா விமானத்தில் ஹாங்காங் செல்ல முற்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts

அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து