உள்நாடு

கண்டி கட்டட விபத்து – மேலும் சிலர் தற்காலிகமாக வெளியேற்றம் [VIDEO]

(UTV | கண்டி ) – கண்டி – பூவெளிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கண்டி- பூவெலிகட பகுதியில் நேற்று(20) காலை 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருந்தது.

குறித்த கட்டிடம் உடைந்து அருகில் இருந்து வீட்டின் மீது விழுந்ததில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று (21) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கட்டிடம் நிலையற்ற நிலத்தில் அமைக்கப்பட்டமையின் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்தார்.

Related posts

புதையல் தோண்டிய ஐவர் கைது

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு