உள்நாடு

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோர் ஆலோசனை வகுப்புகளுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கை நடைமுறையினை மேலும் விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று (21) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனை மீறும் சாரதிகளுக்கு எதிராக எந்தவொரு தண்டப்பணம் விதித்தல் அல்லது நீதிமன்ற நடிவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு இன்று(21) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகள், குறித்த வகுப்புகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை – சஜித்

editor

ஆளும் கட்சி எம்பி மோதல்- ஆரம்பிக்கப்பட்ட விசாரணை